புறக்கோட்டை – பெஸ்டியன் மாவத்தையில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த 95 வர்த்தக நிலையங்கள் நேற்றிரவு (21) அகற்றப்பட்டன.
அதன்படி புறக்கோட்டை – பெஸ்டியன் மாவத்தையில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த 95 வர்த்தக நிலையங்கள் அகற்றப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபையினால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் இதற்கமைவாக, நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகளால் நேற்றிரவு வர்த்தக நிலையங்களை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.