அதிவேக வீதியில் மேல் மாகாணத்திலிருந்து வௌியேறும் பகுதியில் கொரோனா பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதன்படி மாகாண அதிகாரிகளினால் தேர்ந்தெடுக்கப்பட்ட வௌியேறும் பகுதிகளில் எழுமாற்று பரிசோதனைகள் இடம்பெறுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பண்டிகை காலத்தில் பொதுமக்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவது அவசியமெனவும் குடும்பத்தில் ஒருவர் மாத்திரம் அத்தியாவசிய பொருட்கொள்வனவில் ஈடுபட வேண்டுமெனவும் சன நெரிசல் மிகுந்த பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் ,நத்தார் பண்டிகை நாளிலும் அதற்கு முன்னரான நாளிலும் மத வழிபாடுகளின் போது, சமூக இடைவௌி உள்ளிட்ட சுகாதார நடைமுறைகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டுமென பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் கோரிக்கை விடுத்துள்ளார்.