மஹியங்கனை பிரதேசத்தில் நேற்றைய தினம் (21) மீன் மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி குறித்த பகுதியில் தொடர்ச்சியாக நிலவி வந்த வறட்சியுடனான காலநிலையைத் தொடர்ந்து பெய்த மழையின் போது இவ்வாறு மழை நீருடன் மீன்களும் தரையில் வீழ்ந்துள்ளன.
மேலும் ,மழையுடனான காலநிலையுடன் சிறிய அளவிலான புயல் காற்று ஏற்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.