பண்டிகை காலத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்படுகின்ற போக்குவரத்து சுற்றிவளைப்புகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 5ஆம் திகதி வரையில் தொடரும் என பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இதன்படி நேற்று முன்தினம் முதல் இந்த சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதற்காக 9 ஆயிரம் பொலிஸ் அதிகாரிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதேநேரம் , இந்த சுற்றிவளைப்புகளில் இதுவரையில் 113 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இத்துடன் கடந்த தினத்தில் ஏற்பட்ட 60 விபத்துக்களில் 20 பேர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.