வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள இலங்கையர்களை நிபந்தனையுடனான மீள அழைத்துவரும் செயற்பாட்டை தொடர்ந்தும் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வெளியுறவு அமைச்சு நேற்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
சில சர்வதேச நாடுகளில் பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இலங்கைக்கு வருகை தரும் அனைத்து பயணிகளும், வெளியுறவு அமைச்சு மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து ஆணைக்குழு ஆகியவற்றிடம் இருந்து முன் அனுமதி பெறுவது அவசியமாகும்.
மேலும், நிலைமையை தொடர்ந்து ஆய்வு செய்து, திருத்தப்பட்ட வழிகாட்டல்களை வெளியிட நடவடிக்கை எடுப்பதாகவும் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, பிரித்தானியாவிலிருந்து வரும் எந்தவொரு விமானத்தையும் நேற்று நள்ளிரவு முதல் இலங்கைக்குள் பிரவேசிக்க அனுமதிக்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.