திருகோணமலை மாவட்டத்தின் அபயபுர கிராமசேவகர் பிரிவு மற்றும் தினநகர் பிரதேசம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 6 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் அந்த பிரதேசங்களை தனிமைப்படுத்தியுள்ளதாக கொரோனா தடுப்பு செயலணியின் தலைவரும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
குறித்த பிரதேசங்களில் கொரோனா தொற்றாளர்கள் பலர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையிலேயே இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கொழும்பு மாவட்டத்தில் கடந்த இரண்டு ஒரு மாதத்திற்கும் மேலாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த வெல்லம்பிட்டி ‘லக்சந்த செவண’ குடியிருப்பு தொகுதி இன்று காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.