தென் மாகாண விசேட சுற்றிவளைப்பு பிரிவு அதிகாரி ஒருவரை தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
காலி, ரத்கமவில் இரண்டு வர்த்தகர்கள் கொலை செய்யப்பட்டதை அடுத்து தலைமறைவாகிய நிலையில், குறித்த அதிகாரி கைது செய்யப்பட்டார்.
குறித்த சந்தேக நபரை காலி நீதவானிடம் முன்னிலைப்படுத்தப்பட்டு இதற்கான அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் அண்மையில் குற்ற புலனாய்வு திணைக்களத்தில் சரணடைந்ததை அடுத்து கைது செய்யப்பட்டார்.
இதேவேளை, வர்த்தகர்கள் கொலை தொடர்பில், நேற்றைய தினம் வனவளத்துறை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய, குறித்த வர்த்தகர்களுடைய அலைபேசிகள் இரண்டு திக்வெல்ல பிரதேசத்தில் உள்ள வனப்பகுதியின் நீர்நிலை ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.