யாழ்ப்பாணம் - கொடிகாமம் - புத்துார் - வெறும்புராய் பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த வேளையில் கூாிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட மேற்படி நபர் சாவகச்சோி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின் நேற்று உயிாிழந்ததாக பொலிஸ் ஊடகப் பிாிவு தொிவித்துள்ளது.
மீசாலை - வடக்கு பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிாிழந்துள்ளதாக தொிவிக்கப்படுகின்றது.
இக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதோடு இது தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.