சப்புகஸ்கந்த- மாகொல வடக்கு, தேவாலய வீதியில், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் கொவிட் தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட நபரொருவர் வீட்டிலிருந்து தப்பிச்சென்றுள்ளார் என, பொலிஸார் தெரிவித்தனர்.
பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் அறிக்கை கிடைக்கும் வரை வீட்டில் தனிமைப்படுத்தலில் இருந்த மேற்படி நபர், அறிக்கையின் பிரகாரம் தொற்று உறுதியாகியுள்ளதை அறிந்தவுடன் இவ்வாறு தப்பிச்சென்றுள்ளார்.
22 வயதுடைய நிமேஸ் மதுசங்க என்ற இளைஞனே இவ்வாறு தப்பியோடியுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
இவரை பற்றிய தகவல் அறிந்தவர்கள் கீழ்காணும் தொலைபேசி இலக்கங்களுக்கு அறியத் தருமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.
தொலைபேசி இலக்கங்கள்: 071-8591599, 011-2400315, 011-2433333, 119