அரசாங்கத்திற்கு எதிராக மீண்டும் 2015ம் ஆண்டில் இடம்பெற்ற சூழ்ச்சியை போன்ற சதித்திட்டம் இடம்பெற்று வருகின்றன என இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
அரசாங்கத்திற்குள் இருந்து கொண்டே அரசுக்கு எதிரான செயற்பாடுகளை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மேற்கொண்டு வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
அனுராதபுரத்தில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றில் பேசியபோது அவர் இதனைக் கூறியுள்ளார்.
சூழ்ச்சியில் ஈடுபடுவோரை விரைவில் தாம் அம்பலப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.