நிகழ்ச்சி தொகுப்பாளராக பிரபலமானவர் அனிதா சம்பத். இதை தொடர்ந்து இவர் ஒரு சில படங்களிலும் நடித்தார்.
மேலும் இவர் தற்போது பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டு ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார். கடந்த சனிக்கிழமை இவர் பிக்பாஸ்-ல் இருந்து வெளியேறினார்.
இந்நிலையில் தற்போது அனிதா சம்பத்தின் தந்தை சம்பத் காலமானார் என தெரிய வந்துள்ளது. எழுத்தாளரான இவர் மாரடைப்பால் காலமாகியுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் அனிதாவின் கணவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் காலமாகியுள்ள தகவலை பகிர்ந்துள்ளார்.
இதை தொடர்ந்து சமூக வலைதளங்களில் அனிதா சம்பத் தந்தை மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.