எதிர்வரும் மார்ச் மாதத்திற்கு முன் நடத்த உத்தேசிக்கப்பட்டிருந்த மாகாண சபைகளுக்கான தேர்தலை மீண்டும் ஒத்திவைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நேற்று இரவு நடந்த ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கான கூட்டத்தின்போது மேற்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஆளுங்கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் மாகாண சபைக்கான எதிர்ப்பு மற்றும் கொரோனா நெருக்கடி விவகாரத்திற்கு மத்தியில் ஜனாதிபதி இந்த முடிவினை எடுத்திருப்பதாக அறியமுடிகின்றது.