ஜனவரி மாத நடுப்பகுதியில் நாட்டின் விமான நிலையங்களை உத்தியோகபூர்வமாக திறக்க எதிர்பார்த்துள்ளதாக, அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
யுக்ரேன் நாட்டு சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இதன்படி, வணிக ரீதியிலான விமான சேவைகளை ஆரம்பிக்க தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
அத்துடன், சுற்றுலாப் பயணிகளுக்காக நாடு மீண்டும் திறக்கப்படுவதன் காரணமாக புதிய கொரோனா கொத்தணி உருவாகும் என எவரும் அச்சப்பட வேண்டிய அவசியம் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், சுற்றுலாப் பயணிகள் தங்கும் ஹோட்டலில் இருந்து அவர்கள் வெளியேறியதன் பின்னர், குறித்த ஹோட்டல் பணியாளர்கள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள் எனவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், சுற்றுலாப் பயணிகளிடம் இருந்து நாட்டு மக்களுக்கோ அல்லது நாட்டு மக்களிடம் இருந்து சுற்றுலாப் பயணிகளுக்கோ கொரோனா தொற்று பரவல் ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, ரஷ்ய சுற்றுலா வலயத்தில் இருந்து 2 ஆயிரத்து 580 பயணிகள் நாட்டுக்கு வருகை தரவுள்ளதாகவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.