உக்ரைனிலிருந்து இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளில் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
9 மாதங்களின் பின்னர் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று இலங்கை வந்தடைந்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
28 ஆம் திகதி 180 பயணிகளைக் கொண்ட சுற்றுலாக் குழுவொன்றும் நேற்று 204 பயணிகளைக் கொண்ட சுற்றுலாக் குழுவொன்றும் உக்ரைனிலிருந்து இலங்கை வந்துள்ளன.
அவர்கள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தலை முடித்த பின்னர், இலங்கையில் பல்வேறு இடங்களுக்கும் சுற்றுலா செல்ல இருந்தனர்.
இந்நிலையிலேயே மூன்று உக்ரைன் பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டிருந்த கொரோனா தொற்று நிலைமையை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் நாட்டின் அனைத்து விமான நிலையங்களும் மூடபட்டதுடன், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.