அமெரிக்காவின் நாட்டை பிரிக்கும் வேலைத்திட்டத்துக்கு ஆதரவாகவே பிரதமர் ரணில் வி்க்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் செயற்படுவதாக பேராசிரியர் திஸ்ஸ விதாரண குற்றம் சுமத்தியுள்ளார்.
அத்துடன், ஒரே நாட்டுக்குள் தமிழ் மக்களுக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்க முடியாது என்பதை காட்டுவதற்காகவே வடக்கின் முன்னாள் முதலமைச்சர் சிவி.விக்னேஸ்வரன் நிதியை மத்திய அரசாங்கத்துக்கு திருப்பியனுயதாகவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், “வடமாக முதலமைச்சராக இருந்த சி.வி.விக்னேஸ்வரன், மத்திய அரசாங்கம் அனுப்பிய நிதியினை வடக்கு அபிவிருத்திக்கு பயன்படுத்தாமல் திருப்பி அனுப்பினார்.
அதற்கு காரணம், ஒரே நாட்டில் இருந்துகொண்டு தமிழ் மக்களுக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்க முடியாது என்ற விடயத்தை நிரூபிக்கவே அதனை செய்தார்.
இனவாதம், மதவாதத்தை தூண்டி நாடுகளை பிரிக்கும் அமெரிக்காவின் தேவைக்கு அமையவே தற்போது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்ட்டுள்ளன.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.