web log free
January 11, 2025

அவசரத்துக்கு பயன்படுத்த அனுமதி

பைசர்- பயோன்டெக் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பு மருந்தை அவசரகால பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தி கொள்ள உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதியளித்துள்ளது.

சீனாவின் வூஹான் மாநிலத்தில் இருந்து 2019 ஆம் ஆண்டு இறுதியில் முதன் முதலாகக் கண்டறியப்பட்ட கொவிட் 19, தற்போது முழு உலகுக்கும் பரவியுள்ளது.

இதனையடுத்து, பல்வேறு நாடுகள் கொரோனா வைரஸூக்கு எதிராக தடுப்பு மருந்துகளை கண்டறியும் பணிகளை முன்னெடுத்துள்ளன.

இந்நிலையில் பைசர் – பயோன்டென் நிறுவனங்களினால் தயாரிக்கப்பட்டுள்ள தடுப்பு மருந்தை அவசர தேவைக்கு பயன்படுத்தி கொள்ள முடியுமென்று உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகள் குறித்த தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கி, தமது நாட்டிற்கு தேவையான தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடியுமென உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd