2021 ஆம் ஆண்டின் முதல் நாளான நேற்று மட்டும் இந்தியாவில் புதிதாக 60 ஆயிரம் குழந்தைகள் பிறந்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் யூனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபையின் யூனிசெப் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, உலகம் முழுவதும் ஜனவரி ஒன்றாம் திகதி மட்டும் புதிதாக 3,71,504 குழந்தைகள் பிறந்துள்ளதாகவும் இதில் இந்தியாவில் தான் அதிகபட்சமாக 60,000 குழந்தைகள் பிறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்தபடியாக சீனாவில் 35,615 குழந்தைகள், நைஜீரியா (21,439), பாகிஸ்தான் (14,161), இந்தோனேசியா (12,336), எத்தியோப்பியா (12,006), அமெரிக்கா (10,312).
இதனை தொடர்ந்து எகிப்து (9,455), பங்களாதேஷ் (9,236) மற்றும் காங்கோ ஜனநாயக குடியரசு (8,640) குழந்தைகள் பிறந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் யூனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது.