கொட்டதெனிய- கரபொட்டுவாவ பிரதேசத்திலுள்ள இரும்பு உருக்கும் பட்டறையின் கொதிகலன் ஒன்று வெடித்தத்தில் ஒருவர் உயிரிழந்து, இருவர் காயமடைந்துள்ளனர்.
இன்று (3) காலை இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றதுடன், இதில் மரணமடைந்த மற்றும் காயமடைந்த மூவரும் இந்தியர்கள் என்றும் கொட்டதெனிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஜாவிட் என்ற இந்தியரே இவ்வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர் என்றும்; தெரிவித்துள்ள பொலிஸார் படுகாயமடைந்த இருவரும் வத்துபிட்டிவல ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
அதிகமான இந்தியர்கள் கடமையாற்றும் இந்த நிறுவனம், இந்தியாவுக்குச் சொந்தமான நிறுவனம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.