web log free
January 11, 2025

புத்தர் சிலை உடைப்பு சந்தேக நபர் கைது

மாவனல்லை இம்புல பிரதேசத்தில் கொழும்பு - கண்டி பிரதான வீதியில், புத்தர் சிலைக்கு சேதம் ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மாவனெல்லை பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணகைளை அடுத்து, சந்தேக நபர் நேற்று(04) கைது செய்யப்பட்டுள்ளார்.

கேகாலை, ஹெட்டிமுல்லை பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

குறித்த நபர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்றும் இவர் இதற்கு முன்னர் வழிப்பாட்டு தலங்களில் உண்டியலை உடைத்து திருட்டில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், சமூக ஊடகங்களில் பரப்பட்ட தகவலைபோல இது பயங்கரவாத அல்லது தீவிரவாத செயற்பாடு அல்ல என்றும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd