உக்ரைன் நாட்டிலிருந்து மேலும் 183 சுற்றுலாப்பயணிகள் நேற்று இலங்கை வந்தடைந்துள்ளனர்.
நேற்று முற்பகல் மத்தள விமான நிலையத்தை வந்தடைந்த அவர்களுக்கு அரசாங்கத்தின் பராமரிப்பில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையங்கள் வழங்கப்பட உள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.
அதேவேளை எதிர்வரும் 21ஆம் திகதி சுற்றுலாப் பயணிகளுக்காக விமான நிலையங்கள் உத்தியோகபூர்வமாக திறக்கப்பட உள்ள நிலையில் சுற்றுலா பிரயாணிகள் மற்றும் சுற்றுலாத்துறையினர் பின்பற்ற வேண்டிய நடைமுறை வழிமுறைகளை சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.