ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான தகவலை அவர் தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
குறித்த பதிவில், “நான் கொரோனா தொற்று பரிசோதனை செய்தேன். அதில் தொற்று உறுதியாகியுள்ளது, ஆகவே தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு தயாராகிறேன்.
கடந்த 10 நாட்களில் என்னுடன் தொடர்பு கொண்டவர்கள் தேவையான சுகாதார மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.