யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை மீள அமைப்பதற்கான அடிக்கல் இன்று காலை நாட்டப்பட்டது.
முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடித்தழிக்கப்பட்ட அதே இடத்திலேயே அதனை மீள நிர்மானிக்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 3 மணியளவில் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ள மாணவர்களைச் சந்தித்த பல்கலைக்கழக துணைவேந்தர் சி.சிறிசற்குணராஜா, இடித்தழிக்கப்பட்ட நினைவிடத்தை மீள அமைக்கும் பணிகளை ஆரம்பிப்பதாக உறுதியளித்தார்.
இதனையடுத்து துணைவேந்தர் தலைமையிலலேயே நினைவிடத்தை மீள அமைப்பதற்கான அடிக்கல் மாணவர்களினால் நாட்டப்பட்டது.