web log free
February 08, 2026

எதிர்கட்சித் தலைவர் - ஜே.வி.பி இன்று சந்திப்பு

எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை மக்கள் விடுதலை முன்னணியின் பிரதிநிதிகள் இன்று சந்திக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் தொடர்பாக கலந்துரையாடும் நோக்கில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்குவதற்காக அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் தொடர்பான பிரேரணை ஜேவிபியினால் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அதற்கு ஆதரவு பெறும் நோக்கில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Last modified on Wednesday, 11 September 2019 01:41
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd