web log free
January 31, 2026

பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் உத்தியோகப்பூர்வ வலைத்தளம் கௌரவ பிரதமரின் தலைமையில் இணையத்தில் வெளியீடு

பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் உத்தியோகப்பூர்வ வலைத்தளம் www.slwpc.org கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று 2021.03.09 முற்பகல் இணையத்தில் வெளியிடப்பட்டது.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தினால் இவ்வலைத்தளம் வெளியிடப்பட்டுள்ளது.

 பாராளுமன்ற குழு அறை 01இல் நடைபெற்ற இந்நிகழ்வில் கௌரவ சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன அவர்களும் பங்கேற்றார்.

 மேலும் குறித்த சந்தர்ப்பத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ லக்ஷ்மன் கிரியெல்ல, பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவர் இராஜாங்க அமைச்சர் கௌரவ சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே உள்ளிட்ட ஒன்றியத்தின் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd