web log free
January 11, 2025

தினசரி ஊதியமாக ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என்ற வர்த்தமானி அறிவித்தலுக்கு பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வரவேற்பை வெளியிட்டுள்ளனர்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை தினசரி ஊதியமாக ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ள நிலையில், அதற்கு பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பெரும் வரவேற்பை வெளியிட்டுள்ளனர்.

தொழிலாளர்களின் ஊதிய உயர்வுக்காக போராடிய தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள் ஆகியவற்றுக்கும், ஊதிய உயர்வை சம்பள நிர்ணயசபை ஊடாகவேனும் நிர்ணயித்து வழங்குவதற்கு முன்வந்த ஜனாதிபதி, பிரதமர் மற்றும் தொழில் அமைச்சர் ஆகியோருக்கும் நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.

தமக்கு தினசரி ஊதியமாக ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என பெருந்தோட்டத் தொழிலாளர்கள் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் போராடிவருகின்றனர். 6 ஆண்டுகளுக்கு பிறகே அவர்களுக்கு ஆயிரம் ரூபா கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது.

ஆனால், வேலை நாட்கள் குறைக்கப்படாமல், தொழில் சுமைகள் அதிகரிக்கப்படாமல்தான் தமக்கு இந்த சம்பள உயர்வு வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். அத்துடன், தொழிலாளர்களுக்கு நன்மை பயக்கும் வகையில் கூட்டு ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டு அது தொடர்ந்தும் அமுலில் இருக்கவேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றார்கள்.

அதேவேளை, ஆயிரம் ரூபாவை வழங்கிவிட்டு வேலை நாட்களில் கை வைத்தால் அதனை அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்தனர்.

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd