web log free
January 11, 2025

வட மாகாண சுகாதார தொண்டர்களின் போராட்டம் தொடர்கின்றது

வடக்கு மாகாண சுகாதார தொண்டர்களின் உணவு தவிர்ப்பு போராட்டம் மூன்றாவது நாளாகவும் இன்றும் தொடர்கின்றது.

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக போராட்டத்தை முன்னெடுத்துவரும் வடக்கு மாகாண  சுகாதார தொண்டர்களின் கவனயீர்ப்பு போராட்டம் 10வது நாளாக தொடரும் நிலையில், இன்று மூன்றாவது நாளாக உணவு தவிர்ப்பு போராட்டம் தொடர்கின்றது

கடந்த முதலாம் திகதியில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டுவந்த தமக்கு எவருமே  தீர்வினை வழங்காத நிலையில், நேற்று முன்தினம் முதல் தமது போராட்ட வடிவத்தை உணவு தவிர்ப்பு போராட்டமாக மாற்றி முன்னெடுத்து வருகின்றனர்.

மாகாண ஆளுநர் செயலக வளாகத்தில்  கொட்டகை அமைத்து  உணவு தவிர்ப்பு போராட்டத்தில் சுகாதார பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றார்கள்

கடந்த 2019ஆம் ஆண்டு அப்போதைய ஆளுநர் எடுத்த முயற்சியின் பயனாக வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த தொண்டர்களாக கடமையாற்றிய சுகாதார பணியாளர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் வகையில் சுகாதார பணியாளர்களுக்கு நியமன கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

எனினும், குறித்த நியமனத்தில் முறைகேடு இடம்பெற்றதாக பாதிக்கப்பட்ட சுகாதார பணியாளர்கள் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக குறித்த நியமனங்கள் அனைத்தும் இடை நிறுத்தப்பட்டுள்ள நிலையில், நிரந்தர நியமன கடிதம் பெற்ற சுகாதார பணியாளர்கள் 454 பேர் தமக்கு உரிய தீர்வினை வழங்குமாறும், தாம் நீண்ட காலமாக தொண்டு அடிப்படையில் வைத்தியசாலைகளில் கடமையாற்றியதாகவும் எனவே தமக்கு நிரந்தர நியமனத்தை வழங்குமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd