கொழும்பு நகரசபை பகுதியில் பொது மக்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கும் திட்டத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று நேரடியாக சென்று ஆய்வு செய்தார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாரஹென்பிட்டியில் அமைந்துள்ள அபயராம விகாரைக்கு சென்று, அங்கு 1,200 பேருக்கு கொவிட் தடுப்பூசி வழங்கும் திட்டத்தை மேற்பார்வை செய்தார். இந்த திட்டமானது கொழும்பு நகரசபையின் உறுப்பினர்களான கலகம தம்மரன்சி தேரர், டாக்டர் பிரதீப் காரியவாசம் மற்றும் திருமதி மனோரி விக்ரமசிங்க ஆகியோரின் வேண்டுகோளுக்கமைய செயல்படுத்தப்பட்டது.
இந்த தடுப்பூசியானது கொழும்பு நகரசபையின் பிரதம மருத்துவ அதிகாரி ருவான் விஜயமுனி மற்றும் மருத்துவ குழுவினரின் மேற்பார்வையில் கீழ் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் நாரஹென்பிட்ட அபயராம விகாரையின் விகாராதிபதி சங்கநாயக்க முருத்தேட்டுவே ஆனந்த நாயக்க தேரர், மகா சங்கத்தினர், வைத்தியர்கள், வைத்திய தாதிகள், ஊழியர்கள் உட்பட பல பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.