web log free
September 11, 2025

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ விபத்து 50ற்கும் மேற்பட்ட வீடுகளுக்கு சேதம்!

கொழும்பு- கிராண்ட்பாஸ், கஜிமாவத்தை பிரதேசத்திலுள்ள குடியிருப்பு தொகுதியொன்றில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில், சுமார் 50ற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 2.30 மணியளவில் குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கிராண்ட்பாஸ், கஜிமாவத்தை பிரதேசத்திலுள்ள வீடொன்றின், ஒளிரும் விளக்கு ஊடாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மேலும் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதேவேளை தீயைக் கட்டுப்படுத்த சுமார் 5 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதாக தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd