web log free
January 11, 2025

இலங்கை கடற்படைக்கு இந்திய கடற்படை பல்வேறு பயிற்சிக்கருவிகள் அன்பளிப்பு

இலங்கை கடற்படைக்கும் மற்றும் இந்திய கடற்படைக்குமி டையே நட்புறவை விருத்தி செய்வதற்காக இந்திய கடற்படையினால் வழங்கப்பட்டுள்ள டொபிடோ மற்றும் கேஸ் டர்பய்ன்க் கருவி உட்பட (Gas Turbine Cut Modules) பல்வேறு பயிற்சிக் கருவிகளை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இலங்கைக் கடற்படையிடம் கையளித்துள்ளார்.

திருகோணமலைக்கு நேற்று விஜயம் செய்த அவர் அங்கு உள்ள இலங்கை கடற்படையின் கடல்சார் கல்வி ஆய்வகத்தில் வைத்து கிழக்கு மாகாண கடற்படை நிறைவேற்று கட்டளைத்தளபதி ரியர் அட்மிரல் வைரஸ் ஜயரத்னவிடம் உத்தியோகபூர்வமாக ஒப்படைத்தார்.

இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் கரன்பீர் சிங் கடந்த 2019ஆம் ஆண்டில் இலங்கைக் கடற்படைக்கு இப்பொருட்களை வழங்குவதாக உறுதி அளித்திருந்தார்.

இந்த சந்தர்ப்பத்தில் திருகோணமலை கடல்சால் கல்வி ஆய்வகத்தின் கட்டளைத்தளபதி கமாண்டர் தம்மிக்க குமார, இலங்கையிலுள்ள இந்தியத் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கப்டன் விகாஸ் சூட் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd