web log free
January 11, 2025

இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணமாக பிரதமர் மகிந்த ராஜபக்ஷ பங்களாதேஷ் பயணம்

பங்களாதேஷ் மக்கள் குடியரசின் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அழைப்பின் பேரில் இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (19) காலை பங்களாதேஷ் நோக்கி பயணமானார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று காலை பங்களாதேஷின் டாக்காவிலுள்ள ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார். அங்கு பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா உள்ளிட்ட அதிகாரிகளினால் வரவேற்கப்பட்டார்.

இந்த இரண்டு உத்தியோகப்பூர்வ பயணத்தின் போது  பிரதமர் மகிந்த ராஸபக்‌ஷ பங்களாதேஷ் குடியரசின் தேசத்தின் தந்தையாக போற்றப்படும் ஷெயிக் முஜிபர் ரஹ்மான் அவர்களின் ஜனன தின நூற்றாண்டு விழா மற்றும் பங்களாதேஷின் சுதந்திர பொன்விழா ஆகியவற்றில் கலந்து கொள்ளவுள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் இந்த பயணத்தின் போது பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, பங்களாதேஷ் ஜனாதிபதி  முகமது அப்துல் ஹமீத், பங்களாதேஷ் வெளியுறவுத்துறை அமைச்சர் உள்ளிட்ட பிரமுகர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd