web log free
May 15, 2026

அயோத்தியில் அமைக்கப்படும் இராமர் ஆலயத்துக்கு இலங்கையிலிருந்து கல் அனுப்பிவைப்பு

இந்தியாவின் அயோத்தி நகரில் அமைக்கப்பட்டு வரும் இராமர் ஆலயத்துக்கு நுவரெலியா சீத்தாஎலிய சீதையம்மன் ஆலய மூலஸ்தானத்திலிருந்து பெறப்பட்ட  கல் ஒன்றை அனுப்பி வைக்கும் நிகழ்வும் பூஜைகளும் கொழும்பு வெள்ளவத்தை ஸ்ரீ மயூராபதி ஆலயத்தில்  இடம்பெற்றது

இதன் போது,   இலங்கைக்கான இந்திய தூதுவர்  கோபால் பாக்லே, நுவரெலியா சீதையம்மன் ஆலய பரிபாலன சபைத்தலைவர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் எம்.பி, மயூராபதி ஆலய அறங்காவலர் சபைத்தலைவர் பி.சுந்தரலிங்கம்,இந்தியாவுக்கான இலங்கை தூதுவர் மிலிந்த மொரகொட, மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டிருந்தனர். குறித்த கல் இலங்கைக்கான இந்திய தூதுவரிடம் கையளிக்கப்பட்டது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd