web log free
June 29, 2026

விசேட அதிரடிப்படையினரால் கழிவுத் தேயிலை களஞ்சியசாலை சுற்றிவளைப்பு

நுவரெலியா மாவட்டம் பூண்டுலோயா கும்பாலொலுவ பகுதியில் மிகவும் சூட்சுமமான முறையில் இயங்கிவந்த கழிவுத் தேயிலை களஞ்சியசாலை ஒன்றை சுற்றிவளைத்த தலவாக்கலை விசேட அதிரடிப்படையினர், 4 ஆயிரத்து 195 கிலோ கழிவுத் தேயிலையை கைப்பற்றியுள்ளனர்.

அத்துடன், சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கழிவுத் தேயிலையை குறித்த நிலையத்துக்கு கொண்டுவந்து, தூய தேயிலை என்ற போர்வையில் சந்தைக்கு விற்பனைக்கு அனுப்பட்டுள்ளன என விசேட அதிரடிப்படையினர் தகவல் வெளியிட்டனர்.

அத்துடன், கைப்பற்றப்பட்ட கழிவு தேயிலை தூளையும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களையும் சட்ட நடவடிக்கைகளின் நிமித்தம் பூண்டுலோயா பொலிஸாரிடம், விசேட அதிரடிப்படையினர் ஒப்படைத்துள்ளார்கள்.

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd