ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரில், இலங்கை தொடர்பாக முன்வைக்கப்பட்ட பிரேரணை, 11 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பிரேரணை மீதான வாக்கெடுப்பு, இணையவழி மெய்நிகர் முறைமையில், சற்றுமுன்னர் ஜெனிவாவில் இடம்பெற்றது.
47 உறுப்பு நாடுகளைக் கொண்ட, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், பிரேரணைக்கு ஆதரவாக 22 வாக்குகளும், எதிராக 11 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இந்தியா உள்ளிட்ட 14 நாடுகள் வாக்கெடுப்பிலிருந்து விலகியிருந்தன. இலங்கை உள்நாட்டுப் போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கை அரசுக்கு எதிராக ஜெனீவாவில் உள்ள ஐநா மனித உரிமை மன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ள வெற்றி பெற்றது.
தீா்மானத்துக்கு ஆதரவான 22 நாடுகள் வாக்களித்தன. 11 நாடுகள் எதிரான வாக்களித்தன. 14 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
சீனா , ரஷ்யா, பாகிஸ்தான்,பிலிப்பைன்ஸ், சோமாலியா, பங்களாதேஸ், கியூபா, பொலிவியா, எரித்திரியா, உஸ்பெகிஸ்தான், செனகால் உள்ளிட்ட 11 நாடுகள் வாக்கெடுப்பில் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்தன.
14 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. இந்தியா, பஹ்ரைன், புர்கினாஃபசோ, கெமரூன், கெபோன், இந்தோனேசியா, ஜப்பான், லிபியா, மொரிட்டானா, நமீபியா, நேபாளம், செனகல், சூடான், டோகோ ஆகிய நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.
ஐரோப்பிய நாடுகள் பெரும்பாலானவை தீா்மானத்தை ஆதரித்தன.
தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த நாடுகள்
ஆர்ஜென்ரீனா, ஆர்மேனியா, ஒஸ்ரியா, பஹாமஸ், பிரேசில், பல்கேரியா, ஐவரி கோஸ்ற், செக் குடியரசு, டென்மார்க், பிஜி, பிரான்ஸ், யேர்மன், இத்தாலி, மாலாவி, மார்சல் ஐலன்ட், மெக்ஸிகோ, போலன்ட், தென் கொரியா, உக்ரெய்ன், பிரித்தானியா, உருகுவே, நெதர்லாண்ட்
இலங்கையில், பொறுப்புக்கூறலையும், நல்லிணக்கத்தையும், மனித உரிமைகளையும் ஊக்குவித்தல், என்ற தலைப்பிலான குறித்த பிரேரணை, பிரித்தானியா, ஜேர்மனி, கனடா, வடக்கு மெஸிடோனியா, மொன்டினீக்ரோ மற்றும் மலாவி ஆகிய நாடுகளால் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் விவகாரங்கள் தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆறாவது தீர்மானம் இதுவாகும்.