ஏற்கனவே தயாரிக்கப்பட்ட அறிக்கைகள் போலவே மீண்டும் ஒன்றரை வருடங்களுக்கு கால அவகாசம் வழங்கி இன்னுமொரு அறிக்கையைத் தயாரிப்பதற்கான நடவடிக்கையை வழங்குவதற்குத்தான் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் நேற்றைய தீர்மானம் வழி செய்துள்ளதே தவிர பாதிக்கப்படுகின்ற மக்களுக்குத் தேவைப்படுகின்ற சர்வதேச நீதிமன்றக் குற்றவியல் விசாரணை அல்ல என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் தொடர்பில் கொழும்பில் இன்று ஊடகவியலாளர்களை சந்தித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கை குறைந்தது ஒன்றரை வருடங்களுக்கு அரசாங்கத்துக்கு கால அவகாசத்தை வழங்கி மீண்டும் தமிழர்களின் இனப்படுகொலைக்கான பொறுப்புக்கூறலை தாமதித்திருக்கின்றதே தவிர, பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை என்றார்.