எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில்நேற்று முன்தினம் இலங்கை கடற்படையினரால் கைதாகிய 54 இந்திய மீனவர்களில் 40 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மன்னார் மற்றும் முல்லைத்தீவு கடற்பரப்பில் கைதானவர்கள்
இதேவேளையில்,
யாழ்ப்பாணக் கடற்பரப்பில் கைதாகிய 14 மீனவர்களுக்கும் ஊர்காவற்றுறை நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டமையால் அவர்கள் எதிர்வரும் எட்டாம் திகதி வரை காரைநகர் கடற்படை முகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
நீதிமன்றில் வழக்கு தாக்கல்செய்யப்படாத மன்னார் மற்றும் முல்லைத்தீவில் கைதாகிய 40 மீனவர்களும் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.