web log free
June 27, 2026

நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் மகன் மீது இனந்தெரியாத குழு தாக்குதல்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் மூத்த மகன் சாரங்கன் மீது  இனந்தெரியாத 8 பேர் கொண்ட குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு அண்மையிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டிற்குள் வாள், கண்ணாடி போத்தல், இரும்புக் கம்பிகளுடன் நுழைந்த 4 மோட்டார் சைக்கிளில் வந்த 8பேர் கொண்ட குழு நாடாளுமன்ற உறுப்பினரின் மகன் மீது கடுமையான தாக்குதலை மேற்கொண்டதோடு, மோட்டார் சைக்கிளையும் சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது. குறித்த தாக்குதல் வீடியோ காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd