கிளிநொச்சி மாவட்டம் பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இத்தாவில் பகுதியில் நேற்றிரவு (27) இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலியாகியுள்ளார்கள்.
இருசிறுவர்களும் அவர்களின் தந்தையும் உயிரிழந்துள்ளனர்.
நேற்றிரவு யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார் வாகனம், இத்தாவில் பகுதியில் அதற்கு நேர் எதிராக பயணித்த டிப்பர் வாகனத்துடன் மேதுண்டு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது
வீதியை விட்டு விலகிய டிப்பர் வாகனம், மோட்டார் வாகனத்துடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்தில் பளை - தர்மங்கேணி பகுதியை சேர்ந்த சற்குணம் சாருஜன், சற்குணம் சாரங்கன் என்ற 9 மற்றும் 12 வயதுகளை உடைய சிறுவர்கள் இருவரே உயிரிழந்துள்ளனர். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக சம்பவத்தில் படுகாயம் அடைந்த சிறுவர்களின் தந்தை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.