web log free
January 11, 2025

மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை காலமானார்

மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்கள் இன்று யாழ். திருச்சிலுவை கன்னியர் மட வைத்தியசாலையில் மரணம் அடைந்துள்ளதாக மன்னார் ஆயரில்ல செய்திகள் தெரிவிக்கின்றன.

நல்லடக்கம் தொடர்பான செய்தி பின்னர் அறிவிக்கப் படும் எனவும் தற்போது புனித வாரம் அனுஸ்டிக்கப் படுவதனால் வருகின்ற திங்கட்கிழமை நல்லடக்கம் இடம் பெற வாய்பு உள்ளதாகவும் மேலும் தெரிக்கப்படுகிறது.

மன்னார் மறை­மா­வட்­டத்தின் ஓய்­வு­நிலை ஆயர் இரா­யப்பு யோசேப்பு ஆண்­டகை ஆயர் பணியில் 25 வரு­டங்­களை நிறை­வு­செய்து இன்று வெள்­ளி­விழாக் காண்­கிறார்.

இவர் மன்னார் மறை­மா­வட்­டத்தின் இரண்­டா­வது ஆய­ராக 1992ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதம் 20ஆம் திகதி திரு­நி­லைப்­ப­டுத்­தப்­பட்டார்.

ஆயர் 16.04.1940 ஆம் ஆண்டு யாழ்ப்­பாணம் நெடுந்­தீவில் பிறந்தார். நெடுந்­தீவு றோ.க. பாடசாலை, முருங்கன் மகா வித்­தி­யா­லயம், யாழ். புனித பத்­தி­ரி­சியார் கல்­லூரி ஆகியவற்றில் தனது பாட­சாலைக் கல்­வியைத் தொடர்ந்தார்.

கண்டி தேசிய குரு­மடம், திருச்சி புனித பவுல் குரு­மடம் ஆகி­ய­வற்றில் குருத்­துவக்          கல்­வியைக் கற்று 13.12.1967ஆம் ஆண்டு முன்னாள் யாழ்.ஆயர் எமி­லி­யா­னுஸ்­பிள்ளை ஆண்­ட­கை­யினால் யாழ். மரி­யன்னை பேரா­ல­யத்தில் குரு­வாகத்                     திரு­நி­லைப்­ப­டுத்­தப்­பட்டார்.

1992 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 6 ஆம் திகதி முன்னாள் பாப்­ப­ரசர் இரண்டாம் அரு­ளப்பர் சின்­னப்­பரால் மன்னார் மறை­மா­வட்­டத்தின் ஆய­ராக நிய­மனம் பெற்றார். 1992ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதம் 20ஆம் திகதி ஓய்­வு­நிலை ஆயர் தோமஸ் சௌந்­த­ர­நா­யகம் ஆண்­டகை உட்­பட இலங்­கையின் ஏனைய ஆயர்கள் புடை­சூழ மரு­த­மடு அன்னை ஆல­யத்தில்       ஆய­ராகத் திருப்­பொ­ழிவு செய்­யப்­பட்டார்.

ஒரு கொடூ­ர­மான போர்ச் சூழலில் பல்­வேறு நிலை­களில் துன்­பங்­களைச் சுமந்­து­நின்ற     மக்­களின் துய­ரங்­களைத் துடைக்க அவர் அரும்­பா­டு­பட்டார்.

சிறை­களில் வாடும் கைதி­களை அவர் அடிக்­கடி சென்று பார்­வை­யிட்டு அவர்­களின்    விடு­த­லைக்­காகக் குரல் கொடுத்தார். அவர்­க­ளோடு தனிப்­பட்ட தொடர்­பா­டல்­களை    வைத்­தி­ருந்தார். காணா­ம­லாக்­கப்­பட்­ட­வர்கள் சார்­பாக நின்று அவர்­களைக் கண்­டு­பி­டிக்க அல்­லது அவர்­களின் கதியை வெளிக்­கொ­ணர ஓயாது உழைத்தார்.

யுத்­தத்தால் தமது  வாழ்விடங்­களை இழந்­த­வர்­க­ளுக்கு வீடு­களைக் கட்­டிக்­கொ­டுக்க முயற்­சி­களை மேற்­கொண்டார். யுத்­தத்தால் அங்­க­வீ­னர்­க­ளாக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு வாழ்­வோ­தய நிறு­வ­னத்தின் உத­விக்­கரம் பிரிவு மூலம் உத­வி­களைப் புரிந்தார். வவு­னியா       பம்­பை­ம­டுவில் அமைந்­துள்ள வரோட் நிறு­வ­னத்தின் ஊடா­கவும் இவர்­களின்                   புனர்­வாழ்­வுக்­காகப் பாடு­பட்டார்.

யுத்­தத்­தாலும், சுனா­மி­யி­னாலும் பெற்­றோரை இழந்து ஆத­ர­வற்று நின்ற பெண்              சிறார்­க­ளுக்கு வவு­னி­யாவில் சலே­சிய அருட்­ச­கோ­த­ரி­களின் பரா­ம­ரிப்பில் இல்­லத்தை ஆரம்­பித்தார். அதேபோல் மன்­னா­ரிலும் ஆண் சிறார்­க­ளுக்­கான ஓர் இல்­லத்தை              ஆரம்­பித்தார். இவ்­வாறு இன்னும் பல துயர்­து­டைப்புப் பணி­களை முன்­னெ­டுத்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd