web log free
May 13, 2026

தோட்ட தொழிலாளர்களின் ஊதிய விவகாரம் - பெருந்தோட்ட நிறுவனங்களின் கோரிக்கை நிராகரிப்பு

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்த ஊதியமாக ஆயிரம் ரூபாவை வழங்குவது தொடர்பில் அரசினால்  வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கு இடைக்கால தடை விதிக்குமாறு கோரி  பெருந்தோட்ட நிறுவனங்கள் முன்வைத்த கோரிக்கையை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

குறித்த வர்த்தமானியை வலுவற்றதாக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது வர்த்தமானிக்கு எதிராக இடைக்கால தடை விதிக்குமாறு கோரப்பட்ட போதும் நீதிமன்றம் அதனை நிராகரித்தது.

இந்த மனுமீதான மேலதிக விசாரணை எதிர்வரும் மே மாதம் 5ஆம் மற்றும் 17ஆம் திகதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd