கிளிநொச்சி மாவட்டம், இரணைதீவு மக்கள் தமது வாழ்வாதாரமாக மீன்பிடித்தொழிலையே மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், தமது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய மீன்பிடியினால் தமது வாழ்வாதாரம் முற்றாக பாதிக்கப்படுவதாக இரணைதீவு மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
தமது மீன்பிடிதொழிலுக்காக பயன்படுத்தப்படும் வலைகள்,மற்றும் ஏனைய உபகரணங்களை அறுத்தும், உடைக்கப்பட்டும் வருகின்றனர் எனவும், இந்திய மீனவர்களின் வருகையால் தமது படகுகளும் அவர்களது படகுகளால் இடித்து உடைக்கப்படுவதாகவும், இரவு வேளைகளில் மீன்பிடியில் ஈடுபடும்போது பெற்றோல் குண்டுகள் போன்றவற்றை பயன்படுத்தி தம்மை தாக்குவதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.
எனவே, உடனடியாக தமது பிரச்சினைகளை கருத்தில்க் கொண்டு எல்லை தாண்டிய இந்திய மீனவர்களின் வருகையினை நிறுத்துமாறு இரணைதீவு மீனவர்கள் தெரிவித்து வருகின்றனர்