உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் ஞாபகார்த்தமாக மட்டக்களப்பில் இரத்ததான நிகழ்வு.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் உயிர் நீத்தவர்களின் ஞாபகார்த்தமாக இன்று புதன்கிழமை (21) மட்டக்களப்பில் இரத்ததான நிகழ்வு இடம்பெற்றது.
மண்முனை வடக்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில், இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு கிளை, சீரி, கரிதா அறக்கட்டளை, தேசிய இளைஞர் சேவை மன்றம், உள்ளிட்ட பொது அமைப்புக்களின் ஒத்துழைப்புடன், மட்டக்களப்பு தாண்டவன்வெளி பெடினன்ஸ் மண்டபத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
ஆரம்பத்தில் இரத்த நன்கொடையாளர்கள் அனைவரும், மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தியதைத் தொடர்ந்து இரத்ததான நிகழ்வு இடம்பெற்றது.
கடந்த 21.04.2019 அன்று உதிரம் சிந்தி உயிர் நீத்த எம் உறவுகளின் இரண்டு ஆண்டு நினைவாக எங்கள் உதிரம் கொடுத்து அஞ்சலி செலுத்துவோம் எனும் கருத்தின் கீழ் இதன்போது பல இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கினர். இதன்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவு இரத்த நன்கொடைகளைப் பெற்றுக்கொண்டது