web log free
January 11, 2025

மாலி நாட்டில் ஐ.நா அமைதி காக்கும் பணியில் இலங்கை இராணுவ வீரர்கள் 243 பேர் இணைவு

பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் வாழ்த்துக்களுடன் மாலி இராஜ்ஜியத்தில் ஐ.நா.அமைதி காக்கும் பணிக்களுக்கான மூன்றாவது குழு ஜெனரல் ஷவேந்திராவின் வாழ்த்துக்களுக்கு மத்தியில் அமைதிகாக்கும் பயிற்சி நிறுவனத்தில் தொழில் பயிற்சி பெற்ற இராணுவ 243 வீரர்களைக் கொண்ட இலங்கை இராணுவத்தின் புதிய குழு கடந்த செவ்வாய் இரவு (20) புறப்பட்டுச் சென்றது.

மேற்படி குழுவில் இராணுவத்தின் 12 படையணிகளை பிரதிநிதித்துவப்படுத்தி 212 அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் அடங்கியிருந்ததுடன், மேற்கு ஆபிரிக்க நாட்டிற்குச் புறப்பட்டுச் செல்லும் இவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்க ஜெனரல் ஷவேந்திர சில்வா, சிரேஷ்ட அதிகாரிகளுடன் விமான நிலையத்திற்கு வருதை தந்திருந்தமை சிறப்பம்சமாகும்.

இதன்போது தளபதி மாலிக்குச் செல்லும் புதிய குழுவின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் தினேஷ் புலத்சிங்கள, 2 ஆம் கட்டளை அதிகாரி மேஜர் எல் உடகெதர மற்றும் போர்கள போக்குவரத்து குழு உறுப்பினர்களிடன் ஆகியோருடனும் கலந்துரையாடினார்.

ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களுடன் சில எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டு விமான நிலைய செயல்முறை தொடங்குவதற்கு முன்னர் குறுகிய இராணுவ முறைப்படி குழுவிற்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

முன்னதாக ஏப்ரல் 10 ஆம் தேதி, மாலி செல்லும் குழு குகுலேகங்க ஐநா அமைதிகாக்கும் பணிகளுக்கான பயிற்சி பாடசாலையில் இராணுவத் தளபதிக்கு முறையான இராணுவ வணக்கத்தை வழங்கியது. போர்கள போக்குவரத்து குழுவில் இராணுவ அதிகாரிகள் மற்றும் கஜபா படையின் சிப்பாய்களே பெரும்பலும் இருந்தமையோடு இலங்கை இராணுவ சேவை படை, இலங்கை கவச வாகன படை, இலங்கை பொறியியலாளர்கள் படை, இலங்கை சமிஞ்சைப் படை, இலங்கை பொறியியலாளர்கள் சேவைப் படை, இலங்கை இயந்திரவியல் கலாட் படை, இலங்கை இராணுவ போர்கருவிகள் படை, இலங்கை மின்னியல் மற்றும் இயந்திரவியல் பொறியியல் படை, இலங்கை இராணுவ மருத்துவ படை மற்றும் இலங்கை இராணுவ பொது சேவை படை என்பவற்றின் படையினரும் குறுத்த குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

அதே குழுவை சேர்ந்த 31 இராணுவ வீரர்கள் அடங்கிய குழு வழங்கல் தேவைகள் காரணமாக சில நாட்களுக்குப் பிறகு வெளியேறும் என்பதுடன் ஏற்கனவே மாலியில் சேவை செய்யும் குழுவின் (இரண்டாம் கட்டம்) 240 உறுப்பினர்கள் தங்கள் அமைதி காக்கும் பணிகளை முடித்துவிட்டு விரைவில் இரண்டு கட்டங்களாக நாடு திரும்ப உள்ளனர்.

இராணுவ பதவி நிலைப் பிரதானி மேஜர் ஜெனரல் சேனரத் பண்டாரா, பொதுப்பணி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் பிரியங்க பெர்னாண்டோ, நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க, வேளாண்மை மற்றும் கால்நடை பணிப்பக பணிப்பாளர் நாயகம் இந்திரஜித் கந்தனஆராச்சி, பிரிகேடியர் லசந்த ரோட்ரிகோ, அதிகாரிகள் தொழில்வாண்மை அபிவிருத்தி நிலையத்தின் தளபதி மேஜர் ஜெனரல் ஸ்வர்ண போத்தொட்டெ, இராணுவ தலைமையகத்தின் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளரும் வெளிநாட்டு செயல்பாட்டு பணிப்பாளருமான மேஜர் ஜெனரல் லால் சந்திரசிரி, கஜபா படையின் நிலையத் தளபதி பிரிகேடியர் தினேஷ் உடுகம மற்றும் சில சிரேஸ்ட அதிகாரிகள் விமான நிலையத்தில் அவர்கள் புறப்படும் போது இருந்தனர்.

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd