web log free
February 01, 2026

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதியான விசாரணை வேண்டி வழிபாடு

இலங்கையில்  2019 வருடம் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் கொல்லப்பட்ட மக்களை  நினைவுகூர்ந்தும், நீதியான விசாரணை வேண்டும் என பதாதைகளை காட்சியப்படுத்தியவாறும் அட்டன் திருச்சிலுவை ஆலயத்தில் விசேட வழிபாடுகளும்  இன்று (25) இடம்பெற்றன.

ஹட்டன் பிரதேசத்தில் ஆசிரியர் குடும்பம் உட்பட பலரும் இந்த குண்டு தாக்குதலில் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பஸ்தர்களும் இந்த வழிபாடுகளில் ஈடுப்பட்டிருந்தனர்.

ஹட்டன் திருச்சிலுவை ஆலயத்தில் அருட்தந்தை தலைமையில் இருநிமிடம் மௌன அஞ்சலி செலுத்தி, மெழுகுவர்த்தி ஏற்றி உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்தனர். இதில் ஹட்டன் வாழ் பகுதி கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

கடந்த 2019ம் வருடம் ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் 277 பேர் பலியானார்கள். 477 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd