web log free
September 08, 2024

நள்ளிரவு முதல் எரிபொருள் விலையேற்றம்

எரிபொருட்களின் விலைகள் நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளன.

ஒக்டைன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 7 ரூபாயாலும், ஒக்டைன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 3 ரூபாயாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 8 ரூபாயாலும், ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 1 ரூபாயாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய இதுவரை 152 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒக்டைன் 95 ரக பெற்றோல் லீற்றர் 159 ரூபாயாகவும்129 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒக்டைன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்று 132 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதுவரை 126 ரூபாயாகவிருந்த சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் புதிய 134 ரூபாயாகும். 103 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்று 104 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுளது.