இந்தியாவிலிருந்து சட்டவிரோதமான முறையில் படகுமூலமாக மஞ்சள் கட்டிகள் மற்றும் ஏலக்காய் பொதிகளுடன் 12 இந்தியப் பிரஜைகள் இலங்கைக் கடற்படையினரால் யாழ்ப்பாணம் - குதிரைமலை கடற்பிரதேசத்தில் வைத்து நேற்று (28) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் இவர்கள் பயணித்த இரண்டு படகுகளும் இலங்கைக் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இலங்கை - இந்திய மீனவர்களுக்கு இடையிலான எந்த கொடுக்கல் வாங்கலையும் செய்யே வேண்டாம் என இருநாட்டு அரசாங்கங்களும் அறிவித்திருக்கின்ற நிலையிலேயே இந்த சம்பவமும் இடம்பெற்றுள்ளது.
அதற்கைமைய கைதாகிய சந்தேக நபர்கள் பயணித்த படகுகளில் இருந்து 803 கிலோ கிராம் ஏழைக்காய்களும், 2790 கிலோ கிரோம் மஞ்சள் கட்டிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த சந்தேக நபர்கள் இலங்கை கடற்பிரதேசத்தில் பிரவேசித்து இலங்கை மீனவர்களுடன் கொடுக்கல் வாங்கலை செய்யவிருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
எவ்வாறாயினும், நிலவிவரும் கோவிட் அச்சறுத்தல் காரணமாக கைதாகிய 12 இந்தியப் பிரஜைகளும் அவர்களது படகுகளும் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கைக் கடற்படை வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.