புர்கா தடைக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளமை முஸ்லிம் மக்களை அதிருப்தியடையச் செய்துள்ளதாக இம்ரான் மஹ்ரூப் எம்.பி தெரிவித்துள்ளார். அண்மைக்காலமாக இந்த அரசாங்கத்தின் செயற்பாடு மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது எனவும் சீன நாட்டு பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயமும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.
கிண்ணியாவில் நேற்று (29)அவரது அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்த அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில் கொவிட்19 தாக்கம் மூன்றாம் கட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 14 நாட்கள் தனிமைப்படுத்தல் என்றிருந்த நிலையில் ஐந்து நாட்கள் பாடசாலை முடக்கியுள்ளதன் நோக்கம் என்ன எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.