web log free
January 11, 2025

ரஷ்யாவின் உற்பத்தியான ஸ்புட்னிக் V கொரோனா தடுப்பூசி நாட்டிற்கு கொண்டுவரப்பட்டது

கொரோனா வைரஸ் தடுப்பூசி வகைகளில் ஒன்றான ஸ்புட்னிக் V தடுப்பூசியில் ஒருதொகை ரஷ்யாவினால் வழங்கப்பட்ட நிலையில் அவை இன்று (04) அதிகாலை நாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.

கட்டார் நாட்டிற்குச் சொந்தமான விமானத்தில் ஸ்புட்னிக் V என்ற  15,000 தடுப்பூசிகள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் கடமை நேர முகாமையாளர் தெரிவித்தார்.

இலங்கைக்கான ரஷ்யாவின் பிரதி தூதுவர்,  இந்த ஸ்புட்னிக் V தடுப்பூசி தொகையை ஔடத உற்பத்தி, விநியோகம், ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமனவிடம் கையளித்தார்.

அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர், விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன உள்ளிட்டோர் இதன்போது பிரசன்னமாகியிருந்தனர்.

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd