திருகோணமலை மாவட்டத்தின் கப்பல்துறை பகுதியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று நேற்று முன்தினம்(06) இரவு பதிவாகியுள்ளது. இந்த மோதல் சம்பவத்தில் மேலும் நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.
கிண்ணியா பகுதியிலிருந்து கப்பல்துறைக்கு சென்ற சிலர், அங்கிரந்த சிலருடன் நள்ளிரவு ஒரு மணியளவில் மோதலில் ஈடுபட்டதாகவும், இதன்போது, 20 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த 04 பேரில் மூன்று இளைஞர்களும் 60 வயதான முதியவர் ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.
இச்சம்பவத்தில் காயமடைந்தவர்கள் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் கிண்ணியா தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. சீனக்குடா பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.