கிளிநொச்சி மாவட்டத்தில் 230 கட்டில்களுடன் புதிதாக கொரோனா சிகிச்சை நிலையம் நேற்று(07) முதல் தயார்ப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே, வடமாகாணத்திற்கான தொற்று நோய் மருத்துவமனையான கிருஸ்ணபுரம் வைத்தியசாலை செயற்பட்டு வந்த நிலையில் தற்போது அதற்கு மேலதிகமாக கிளிநொச்சி மலையாளபுரம் கிராமத்தில் இதுவரைகாலமும் இராணுவ வைத்தியசாலையாக இயங்கி வந்த நிலையம் தற்போது கொரோனா சிகிச்சைநிலையமாக மாற்றப்பட்டுள்ளது.
அவ் வைத்திசாலையினை கிளிநொச்சி மாவட்ட படைமுகாம்களின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கஜேந்திர ரணசிங்க மற்றும் கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் சரவணபவன் ஆகியோர்கள் வைத்திசாலையின் நிலைமைகளை பார்வையிட்டனர்.
இது கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் கீழ் செயற்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.