தனிமைப்படுத்தல் விதிகளை மீறுவோர் காவல்த்துறையினரால் தொடர்ந்தும் கைது செய்யப்பட்டு வருகின்றனர்
நேற்று (07)மட்டும் இலங்கை முழுவதிலும் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 617 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்.
இது வரை தனிமைப்படுத்தல் விதிகளை மீறியவர்களில் அதிகமானோர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். முகக்கவசம் அணியாமை, சமூக இடைவெளிகளை பேணாமை உள்ளிட்ட கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறியவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டு வருகின்றார்கள்.